2019ல் அடியெடுத்து வைக்கும் கடக ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 5-ம் வீட்டிலும், சனி பகவான் 9-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் பண வரவு கணிசமான முறையில் உயரும். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சிக்கும், வருமானத்துக்கும் குறைவு இருக்காது. பெரிய பெரிய காரியங்களை கூட சர்வ சாதாரணமாக செய்ய முடியும். மனதில் நினைத்த ஒன்றை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம். பொருளாதார நிலைமை நல்ல நிலையில் இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளை இழுத்துப்போட்டுக் கொண்டு பார்க்க வேண்டிவரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும். உடன்பிறந்தோருக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை ஏற்படும். உங்களுடைய எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் அதிகப்படியான பொறுப்புணர்ச்சி வெளிப்படும். வரவேண்டிய தொகை சரியான நேரத்தில் கைக்கு வரும். வரவுக்கு மீறிய செலவுகளால் பண விரையம் ஏற்படும். பழைய கடன் முழுவதும் அடைப்படும். பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களால் நிறைய நன்மைகளை பெற முடியும். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். புதிதாக கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம், இருப்பினும் குரு பார்வை இருப்பதால் கடன் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். பண விரயங்கள் கூட சுப விரயங்களாக மட்டும் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பூர்விக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுக்கள் தொடரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு, ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். பெற்றோர்களால் நன்மைகள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எப்போதும் நிதானத்துடன் செயல்படவும். சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் உண்டு. உத்யோகத்தில் பல நல்ல சலுகைகள் கிடைக்கும். புதிய தொழில், தொடங்கும் வாய்ப்புகள் விரைவில் அமையும். எப்படி பார்த்தாலும் நல்ல யோகமான பலன்கள் உங்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கும் என்பதில் சந்தேகமும் கொள்ள தேவையில்லை.
பரிகாரம் : இந்த ஆண்டு முழுவதும் பெண் தெய்வ வழிபாடு உங்கள் ராசிக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831